ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்
கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார்.
IPLலில் தினமும் போட்டிப்போடும் 2 அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையிலேயே இந்த ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டும் வருகிகின்றது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை கொல்கத்தா அணியும்,சென்னை அணியும் விளையாடியது.இப்போட்டியை ராஸிக் ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில் ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.
இதே போல் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களைத் தாண்டி, ராஸிக் இச்சாதனை படைத்து வெற்றியை தன்வசப்படுத்தினார்.வென்ற ராஸித் கண்ணூரில் ஏகேஜி மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிப்பெற்ற தொகையில் ₹30 லட்சம் வரி போக, மீதம் ₹70 லட்சம் தொகை அவருக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…