வாழ்த்து தெரிவித்த ட்ராவிட் .. எமோஷனல் ஆன கம்பீர் ! வீடியோ வெளியிட்ட பிசிசிஐ ..!
பிசிசிஐ : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று முதல் பணியாற்ற உள்ள நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட், கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியிருப்பார். அவர் பேசிய வீடீயோவை பார்த்து கம்பீர் எமோஷனல் ஆகி மனம் திறந்து பேசி இருப்பார்.
இந்த வீடீயோவை பிசிசிஐ அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கம்பீருக்கு, ட்ராவிட் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது, “வணக்கம், கௌதம், இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
மேலும் இந்தப் புதிய பொறுப்பில் இருந்து கொண்டு அணிக்காக நல்ல பண்புகளை நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்குத் தெரியும், நம் இந்திய அணியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும், மேலும் ஆய்வு தீவிரமாக இருக்கும்.
ஆனால், மோசமான சமயங்களும் வரலாம், ஆனால், எந்த ஒரு மோசமான நிலையிலும் கூட சில சமயங்களில், நீங்கள் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டீர்கள். நம் வீரர்கள், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் தயிரியமாக இருங்கள்.
நீங்கள் மிகவும் சிறந்தவர் கெளதம், இந்திய அணியை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அதற்கு என் வாழ்த்துக்கள்”, என்று ட்ராவிட் கூறி இருந்தார். அதற்கு புன்னகையுடன் எமோஷனல் ஆன கம்பீர் அவருக்கு பதிலளித்து பேசி இருந்தார்.
𝗣𝗮𝘀𝘀𝗶𝗻𝗴 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗯𝗮𝘁𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗰𝗹𝗮𝘀𝘀 & 𝗴𝗿𝗮𝗰𝗲! 📝
To,
Gautam Gambhir ✉From,
Rahul Dravid 🔊#TeamIndia | #SLvIND | @GautamGambhir pic.twitter.com/k33X5GKHm0— BCCI (@BCCI) July 27, 2024
அவர் கூறுகையில், “எனக்கு என்ன சொல்வேதென்று தெரியவில்லை, ஏனென்றால் இந்த செய்தி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனது கிரிக்கெட் கேரியரில் நான் கண்ட ஒரு தன்னலமற்ற வீரர் என்றால் அது ராகுல் ட்ராவிட் தான். நான் விளையாடும் போது அதை உணர்ந்தேன், தற்போது அதனை மீண்டும் நான் உணர்கிறேன்.
மேலும், இந்த பொறுப்பு அடுத்த தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் இந்திய கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானது என்பதை கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் சாதாரணமாக அதிக உணர்ச்சிவசப்படுவதில்லை, ஆனால் ராகுல் ட்ராவிட்டின் இந்த செய்தி உண்மையில் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது என்று நினைக்கிறேன்.
இந்த பொறுப்பு ஒரு பெரிய விஷயம், என்னால் முடியும், என்று நம்புகிறேன், நான் அதை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் செய்வேன் என்று ராகுல் ட்ராவிடும் பெருமைப்படுகிறார்”, என்று கம்பீர் கூறினார்.