ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது.
ஐபிஎல் தொடரில் வாரத்தின் கடைசி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இன்று மதியம் 3.30 மணி போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு தோல்விக்கு பிறகு இந்த இரு அணிகளும் இந்த போட்டியில் சந்திக்கிறது.
இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் வைத்து மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் என்றால் லக்னோ அணியில் பூரன் அதனால் இரு அணிகளிலும் சிக்ஸர் பறக்க விடும் வீரர்கள் இருப்பதால் ஈடன் காடன் மைதானத்தில் சிக்சருக்கு துளி அளவு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய லக்னோ அணி அதில் 3 வெற்றிகளை பெற்று 4-வது இடத்தில் இருந்து வருகிறது. அதே போல 4 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்த இரண்டு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அந்த 3 முறையும் லக்னோ அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் லக்னோ அணி இந்த போட்டியை வெல்வார்கள் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணி வீரர்கள் :
பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி
லக்னோ அணி வீரர்கள் :
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…