100-வது டெஸ்டில் இரட்டை சதம்! டேவிட் வார்னர் அபாரம்.!

Default Image

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார்.  

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் விளையாடுகிறது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் மூன்று வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதமடித்துள்ளார்.

உலக அளவில் டேவிட் வார்னர், 100-வது டெஸ்ட்டில் சதமடித்த 10-வது வீரராவார், மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர். இதற்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியாவிற்காக தனது 100-வது டெஸ்ட்டில் சதமடித்திருந்தார்.

மேலும் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர் 200 ரன்கள் அடித்தவுடன், பாதியிலேயே வார்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident