Rohit Sharma replied to Inzamam Ul Haq [file image]
ரோஹித் சர்மா: இந்தியா அணியின் தொடர் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் இந்திய அணி மீது குற்றம் சாட்டி இருந்தார்.
அதாவது, இந்திய அணி பந்தை சேதப்படுத்தி, அதை ரிவர்ஸ் ஸ்விங் செய்து வெற்றி பெறுகிறார்கள், அதிலும் அர்ஷதீப் சிங் இதனை சேதப்படுத்தி தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் இதனால் ஐசிசி இதனை முறையாக விசாரிக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
இதை பற்றி இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இவரது இந்த கருத்தை குறித்து இந்தியா டுடே பத்திரிகைக்கு பதிலடியாக அவர் கருத்தை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் பேசிய போது, “இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? சூரிய வெளிச்சத்திற்கு கீழே விளையாடும் போது பிட்ச் காய்ந்திருந்தால் பந்து தன்னை தானே ஸ்விங் செய்து கொள்ளும்.
எங்களுக்கு மட்டும் இல்லை, பந்து இங்கே அனைத்து அணிகளுக்கும் ரிவர்ஸ் ஆகிறது. எனவே அது எப்படி ரிவர்ஸ் ஆகிறது? என்பதை தெரிந்து கொள்ள சில நேரங்களில் நிதானமாக நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்த வேண்டும்.
அதே சமயம் நீங்கள் எந்த இடத்தில் விளையாடுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் தற்போது இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவில் விளையாடவில்லை, சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு விளையாடிய உங்களுக்கு கூடவா அது தெரியாது? என அவருக்கு ரோஹித் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…