என்னை தெரியலையா? தீபக் சாஹரை பேட்டால் அடித்த தோனி! வைரலாகும் வீடியோ!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றிபெற்ற பிறகு தீபக் சாஹரை தோனி பேட்டால் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்தே சென்னை அணிக்காக விளையாடிய வீரர். அவர் சென்னை அணிக்காக விளையாடும்போது அப்போது கேப்டனாக இருந்த தோனியிடம் நல்ல நட்பு உறவு ஏற்பட்டு இருவரும் சிறந்த நண்பர்கள் போல விளையாடி கொள்வார்கள். தீபக் சாஹர் எதாவது பந்துகளை தவறவிட்டால் தோனி ஒரு ரியாக்சன் கொடுப்பார் அது உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.
அதைப்போல, மற்றவர்களை விட தீபக் சஹரை பந்தை கொண்டு எறிவது…அவரை போட்டால் அடிப்பது போல செய்கை காட்டுவது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்களில் தோனி ஈடுபடுவார். இதனையும் ரசிகர்கள் ரசித்துக்கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு தீபக் அணியை விட்டு வேறு அணிக்கு சென்ற காரணத்தால் இதெல்லாம் மிஸ் செய்வதாக சமூக வலைத்தளங்களில் புலம்பிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால், தோனி அவர் வேறு அணிக்கு போனால் என்ன? எங்களுடைய விளையாட்டு எப்போது ஜாலியாக இருக்கும் என்பது போல நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற பிறகு தீபக் சஹரை செல்லமாக பேட்டை வைத்து அடித்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
போட்டி முடிந்த பிறகு தோனி மும்பை அணி வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருந்தார். அப்போது தீபக் சாஹர் தோனியை பார்த்தும் பார்க்காதது போல சென்றார். இதனை கவனித்த தோனி என்னை பார்த்துவிட்டு பார்க்காத மாதிரியா செல்கிறாய்? இந்த வச்சிக்கோ என்பது போல பேட்டை வைத்து பின்னல் அடித்தார். உடனே, தீபக் சாஹரும் சிரித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், உங்க ரெண்டு பேருக்கும் இந்த ஜாலிக்கு குறைச்சலே இல்லை என கூறி வருகிறார்கள்.
MS Dhoni giving BAT treatment to Deepak Chahar😭pic.twitter.com/2uYGLkFdpy
— ` (@lofteddrive45) March 23, 2025