ருதுராஜ் கெய்கவாட் வேண்டாம் … அந்த இளம் வீரர் போதும்…! கம்பீர் எடுத்த அதிரடி முடிவு?
கவுதம் கம்பீர் : இலங்கை தொடருக்கு எதிராக இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டமானது நேற்று (ஜூலை-17) மாலை நடைபெற்றது. ஆனால், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இந்த கூட்டமானது நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுது. இந்த கூட்டத்தில் கவுதம் கம்பீர் இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாக சில தகவல் வெளியாகி உள்ளது.
அதில் ஒன்று தான், இம்மாத இறுதியில் வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான சுற்று பயணத் தொடரில் இந்திய அணியில் வளர்ந்து வரும் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் வேண்டாம் எனவும் அவருக்கு பதிலாக 23-வயது இளம் வீரரான அபிஷேக் சர்மாவை அணியில் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் இந்த தகவல் பரவி வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டியதன் மூலம் இந்திய அணியில் இடம்பெற்றார் ருதுராஜ் கெய்கவாட். அவர் இந்திய அணிக்காக 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் அடித்துள்ளார், அதே போல 23 சர்வேதச டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 633 ரன்கள் அடித்துள்ளார்.
தற்போது, நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் சிறப்பாகவே விளையாடி இருந்தார். மேலும், இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், இதற்கு இந்திய அணியின் ரசிகர்கள் அனுபவம் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்றைய நாளில் இதே போல, சூரியகுமார் யாதவை இலங்கை தொடருக்கு டி20 இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கேட்டுக் கொண்டதால் கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.