யாருனு தெரியலையா? லுக் விட்ட சாய் கிஷோர்… டென்ஷனான ஹர்திக் பாண்டியா!
குஜராத் மும்பை மோதிக்கொண்ட ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா - சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது.

குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ.) இடையிலான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோருக்கும் இடையே 15-வது ஓவரில் ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு 36 பந்துகளில் 83 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. அப்போது சாய் கிஷோர் பந்து வீச, ஹார்திக் பாண்டியா ஒரு பந்தை தடுத்து ஆடினார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது **க் ஆஃப்” (வெளியே போ!) என்று சத்தமாகக் ஹர்திக் கத்தினார்.
பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கோபமாக பார்த்து, ஒரு கணம் மைதானத்தில் பதற்றம் நிலவியது. அதன்பிறகு வேகமாக போட்டியின் நடுவர் வந்ததும் வாக்குவாதம் சுமுகமாக முடிந்தது. இருப்பினும், ஹர்திக் பாண்டியா பார்த்த பார்வை என்னை தெரியவில்லையா? உன் அணியின் முன்னாள் கேப்டன் என்பது போல பார்த்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
IPL PEAKED HERE 🥵…#IPl #IPL2025 #GTvMI #HardikPandya #SaiKishore #SikandarEid2025 #SalmanKhan𓃵 #RohitSharma #robinminz #happyugadi2025 #GudiPadwa2025 #Spritual #ไฟไหม้ป่า #งานบอลช่อง3 #helevier #แผ่นดินไหว #GrandeFratello #amici24 #Tommavi #earthquake #DCvSRH #DALS pic.twitter.com/sfpnE6P0lo
— Pankaj Saini (@PANKAJS68690951) March 30, 2025
ஆனால், போட்டி முடிந்த பிறகு இந்த சம்பவம் ஒரு அழகான திருப்பத்தைப்யும் பெற்றது. அது என்னவென்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்தவுடன், ஹார்திக் பாண்டியாவும் சாய் கிஷோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, சிரித்தபடி பேசினர். போட்டியின் போது அப்படி இருப்போம் ஆனால், என்றைக்கும் நண்பர்கள் தான் என்பது போல அவர்களுடைய செயல் இருந்தது. இதனை பார்த்த பலரும் இப்படி தான் இருக்கனும் என கூறி வருகிறார்கள்.
