ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பைக்கு பிறகு உள்ளூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாமல், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக உள்ளதும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாததும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், ஒருநாள் உலகக்கோப்பை பிறகு, அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும், 2024, டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. இதனால், சமீபத்தில் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மாவா அல்லது பாண்டியாவா என்றும் விராட் கோலி போன்ற சீனியர்கள் விளையாடுவார்களா அல்லது தற்போது உள்ளதுபோல் முழுவதுமாக இளம் இந்திய அணி விளையாடுமா? என பல்வேறு குழப்பங்கள் காணப்படுகிறது.
முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து..!
அப்படி இருக்கும்பட்சத்தில் இந்திய அணியின் கலவை எப்படி இருக்கும்? மற்றும் எம்மாதிரியான அணி உருவாக்கப்படும் என கேள்விகள் எழுந்துள்ளது. இதில், குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் விளையாடவில்லை, இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்.
அதேவேளையில், BCCI தேர்வாளர்கள் 2024 T20I கேப்டனாக ரோஹித் சர்மாவை அணுகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ரோஹித் ஷர்மா வெள்ளை பந்து லீக்கில் இருந்து ஓய்வு எடுத்தாலும், அவர் 2024, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்த தகுதி பெறுவார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கவுதம் கம்பீர் கூறியதாவது, ரோஹித்சர்மா நல்ல பார்மில் இருந்தால் 2024ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும். அதாவது, ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தால், டி20 உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக செயல்பட வேண்டும் அல்லது நல்ல ஃபார்மில் இல்லையென்றால் அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யக்கூடாது.
ஏனென்றால், கேப்டன் பதவி என்பது ஒரு முக்கிய பொறுப்பு. முதலில், ஒரு வீரராக தேர்ந்தெடுப்பார்கள், பிறகு கேப்டனாக ஆக்கிவிடுவார்கள். விளையாடும் 11 பேரில் ஒரு கேப்டனுக்கு நிரந்தர இடம் இருக்க வேண்டும், நிரந்தர இடம் என்பது ஃபார்மைப் பொறுத்தது. ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும்போது, சேர்க்கும்போது வயது ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது, அவர்களது ஃபார்ம் மற்றும் உடற்தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும். ஓய்வு என்பது ஒரு தனிப்பட்ட முடிவு, ஒரு வீரரை ஓய்வு பெற யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…