‘இந்திய அணி இப்படி பன்னுவாங்கனு எதிர்பாக்கல’ – ஆஸி. முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்!
இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த தொடரை 1-0 என தொடங்கியுள்ளனர். இதனால், பலரும் இந்தியா அணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளிக்கும் எனவும் இந்திய அணி வெளிநாடுகளில் மிக சிற்பபாக விளையாடுகிறார்கள் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளரர் சந்திப்பில் ரிக்கி பாண்டிங் இது குறித்து பேசியிருந்தார். அவர் கூறியதாவது, “இந்திய அணியின் இந்த மிகப்பெரிய வெற்றி ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவா? என்று பலரும் என்னிடம் கேட்டனர்.
இதற்கு முன்பு பெர்த்தில் நடந்த 4 டெஸ்டுகளிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, முதலில் தான் பேட்டிங் செய்தாக வேண்டும். முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் சுருண்டாலும், அவர்களுக்கு பவுலிங்குக்கு உகந்த பிட்சில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.
வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சமீபத்தில், இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. உள்ளூர் சூழலைவிட வெளிநாட்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு இங்குள்ள மைத்தனத்திற்கு ஏற்ப நன்றாகவே விளையாடுகிறார்கள். அதை கடந்த வாரம் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர்”, என ரிக்கி பாண்டிங் பேசி இருந்தார்.