IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார்.
கிரிக்கெட்டில் அவரது சிறப்பான விளையாட்டால் பல சாதனைகளை செய்த பொது அவரது ரசிகர்களாலும், பல வர்ணனையாளர்களாலும் ‘கிங்’ என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அன்பாக்ஸ் நிகழ்வில் பேசும் போது, “நண்பர்களே, நாங்கள் மிக விரைவாக சென்னைக்கு செல்ல ஆயுத்தமாக இருக்கிறோம். எனவே எங்களுக்கு அதிக நேரம் இல்லை. மேலும், நீங்கள் என்னை ‘கிங்’ என்ற வார்த்தையை கூறி அழைப்பதை நிறுத்துங்கள்.
எனது ரசிகர்கள் என்னை ‘கிங்’ என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று டூபிளெஸ்ஸியிடன் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். அதனால் இனிமேல் என்னை ‘கிங்’ என்று அழைக்காமல், ‘விராட்’ என்று அழையுங்கள். அந்த வார்த்தையை இனிமேல் பயன்படுத்த வேண்டாம் இது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது”, என்று ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனமுடைந்து பேசி இருந்தார்.
இதனால் விராட் கோலியின் ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். எந்த காரணத்திற்காக அவர் ‘கிங்’ என்று சொல்லாதீர்கள் என்று சொன்னார் என்பது தெரியாது. ஆனால் அப்படி அழைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று அவர் கூறியதால் இனி அவரது ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் அவர் விளையாடும் பொழுது ‘கிங்’ என்று அழைக்கமாட்டார்கள் என கருதப்படுகிறது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…