இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?

Published by
அகில் R

IPL 2024 : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே அதற்கு சாதாரணமாகவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வரும். ஆனால், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு இது வரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்கள் என்ன ? எதனால் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு என்பதை பற்றி நாம் இந்த பதிப்பில் பார்க்கலாம்.

Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

இந்த ஐபிஎல் தொடர் எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்களால் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஏரளாமானோர் சொல்லும் காரணம் என்னவென்றால் ‘தல’ தோனிக்கு இது கடைசியான ஐபிஎல் தொடர் என்றுதான். சென்னை அணியின் விக்கெட் கீப்பர் கேப்டனான எம்.எஸ்.தோனி இது வரை விளையாடிய 16 ஐபிஎல் சீசன்களில் 10 முறை அணியை இறுதி போட்டிக்கு கொண்டு சென்று அதில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இதனால் 6-வது முறையாக கோப்பையை அவர் அடிப்பார் எனும் முனைப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

Read More :- IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

அவர் தற்போது வரை ‘இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர்’ என்று அதிகார பூர்வமாக அறிவித்ததில்லை. ஆனால் ரசிகர்களின் எதிர் பார்ப்பில்  இது மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்த படியாக சொல்ல வேண்டும் என்றால் மும்பை அணியில் நிலவி வரும் குழப்பங்கள். மும்பை அணியில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்த ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி விட்டு குஜராத் கேப்டனாக செயல்பட்ட ஹர்டிக் பாண்டியவை மீண்டும் மும்பை அணியில் எடுத்து அவரை கேப்டனாகவும் நியமித்ததாகும்.

இதனால் ரோஹித் ரசிகர்கள் மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீது பயங்கர கோபத்தில் இருந்து வருகின்றனர். இதனால் பலவித சர்ச்சைகளும் எழுந்து கொண்டே வந்தாலும் எதிர்ப்பார்புக்கு பஞ்சம் குறியாமல் இருந்து வருகிறது. இதற்கு அடுத்த படியாக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு 2-வது குழந்தை பிறந்த காரணத்தால் இங்கிலாந்து அணியுடனான தொடரில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.  அது மட்டுமின்றி விராட் கோலி கடைசி 2 மாதங்களாக எந்த வித தொடரிலும் விளையாடவில்லை தற்போது நேராக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது தான்.

Read More :- சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட 5 ஐபிஎல் அணி எது தெரியுமா ?

இதனால் அவரது ரசிகர்கள் அவரது விளையாட்டை காண ஆவலுடன் இருந்து வருகின்றனர். இது போன்ற மற்றொரு காரணம் ரிஷப் பண்ட்டின் ‘கம்பேக்’. கடந்த டிசம்பர் 31, 2022 ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் இந்திய அணிக்காக கடந்த 1 வருடங்களாக எந்த வித தொடரிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் அவர் திரும்ப வந்ததுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல் பட உள்ளார்.

Recent Posts

ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…

19 minutes ago

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…

1 hour ago

ஐந்து பாட்டுக்கு 75 கோடி செலவு! கேம் சேஞ்சர் குறித்து உண்மையை உடைத்த தில் ராஜு!

மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…

2 hours ago

தமிழ்நாட்டில் 10, 11 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…

2 hours ago

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…

3 hours ago

இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…

3 hours ago