கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 16-வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று இரவும் 6 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் தீவிரமான பயிற்சியில் 10 அணி வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணியில் இருந்தும் விலகிய வீரர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஆர்.சி.பி அணியில் வில் ஜாக்ஸுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அணியில் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக சிசண்டா மகலா சேர்க்கப்பட்டுள்ளார். அதைப்போல வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியில் காயம் காரணமாக வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியுள்ளார்கள். கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் இவர் பாதி போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியிலும் ரிஷப் பந்த்தும் காயம் காரணமாக இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார்.
மேலும், 16-வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…