ஐபிஎல்லில் 8 அணிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா ? இவரா .. பயங்கரமான ஆள் ஆச்சே ..!

Published by
அகில் R

IPL 2024 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளுக்காகவும் விளையாடிய ஒரே வீரர் இந்தியாவை சேர்ந்த இடது கை வேக பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் ஆவார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ஐபிஎல் வரலாற்றில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் தற்போது  நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் 2024  தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் ஹைதராபாத் அணிக்காக பந்து வீசினர். இதன் மூலம் இவர் ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் விளையாடிய முதல் வீரராக ஜெயதேவ் உனட்காட் இருக்கிறார்.

ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது, இந்த ஏலத்தில் ஹைதராபாத் அணி ஜெயதேவ் உனட்கட்டை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். இவரது ஐபிஎல் பயணம் 2010-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு 2013-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார், அதை தொடர்ந்து 2014-ம் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேபிட்டல்ஸ்) அணியில் இடம் பெற்ற அவர் இரண்டு ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடினார்.

பின் மீண்டும் 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு தோனி தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2018 முதல் தொடர்ந்து 3 வருடங்கள் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் 2022-ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடினர். அதன் பின் 2023-ம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

தற்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் விளையாடி வருகிறார். இதன் மூலம் ஒரு வீரராக அதிக ஐபிஎல் அணிகளில், (மொத்தமாக 8 ஐபிஎல் அணிகள்) விளையாடிய வீரர் என்ற சாதனையை தற்போது மும்பை அணியுடனான போட்டியின் மூலம் செய்துள்ளார். இவர் நேற்று நடைபெற்ற மும்பையுடனான போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

42 minutes ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

54 minutes ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

1 hour ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

1 hour ago

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து பற்றி பரவும் வதந்தி! மௌனம் கலைத்த மகள் ரஹீமா!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…

1 hour ago

அதானி குழுமம் மீதான குற்றசாட்டு! விசாரணையை தொடங்கியது செபி!

டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…

2 hours ago