2022இல் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்தவர்கள் யார் தெரியுமா?

Default Image

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் ஷ்ரேயஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த 2022ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆசியக்கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை என இரண்டு முக்கிய தொடர்களில் இந்தியாவிற்கு தோல்வியாக முடிவடைந்தது. ஆனாலும் இந்திய அணியில் சில வீரர்கள் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளனர்.

இந்த வருடம் இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் 1,609 ரன்களுடன் (சராசரி-48.75) முதலிடத்தில் இருக்கிறார். ஒரு சதம் மற்றும் 14 அரைசதம் உட்பட சிறந்த ஸ்கோர் 113* ரன்கள் குவித்துள்ளார். 5 டெஸ்ட்களில் 422 ரன்கள், 17 ஒருநாள் போட்டிகளில் 724 ரன்கள் மற்றும் டி-20 களில் 463 ரன்கள் குவித்திருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ், 1,424 ரன்களுடன் (சராசரி-46.56) 2-வது இடத்தில் இருக்கிறார். இரண்டு சதம் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட சிறந்த ஸ்கோர் 117 ரன்கள் குவித்துள்ளார்.இந்த வருடத்தில் சூர்யகுமார், டி-20 போட்டிகளில் இந்தியாவிற்காக 1,164 ரன்கள் குவித்து டி-20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ரிஷப் பந்த், 1,380 ரன்களுடன் (சராசரி-37.29) 3-வது இடத்தில் இருக்கிறார். இரண்டு சதம் மற்றும் 9 அரைசதங்கள் உட்பட சிறந்த ஸ்கோர் 117 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பந்த், இந்த வருடம் 680 ரன்கள் (சராசரி-61.81) குவித்துள்ளார்.

விராட் கோலி இரண்டு சதம் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட 1,348 ரன்களுடன் (சராசரி-38.51) 4-வது இடத்தில் இருக்கிறார். இந்த வருடம் டி-20 போட்டிகளில் விராட் கோலி, மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பியிருந்தார், குறிப்பாக டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் மேட்ச் வின்னிங் ஆட்டம் யாராலும் மறக்க முடியாதது.

ரோஹித் ஷர்மா 40 இன்னிங்சில், 6 அரைசதங்களுடன் 980 ரன்கள் (சராசரி-27.63) குவித்து 5-வது இடத்தில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்