இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஐபிஎல் அணி எது தெரியுமா ?

Insa followers [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கிய பொழுது ஒரு அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மைதானத்தில் கூடும் கூட்டத்தை வைத்தும், டிவி-யின் TRP வைத்தும் கணக்கெடுத்து கொள்வார்கள். ஆனால் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்தவுடன் சமூக வலைத்தளத்தில் யாருக்கு அதிக ஃபாலோவர்ஸை என்பதை வைத்து யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அணி என்று பார்க்கிறார்கள்.

Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?

அதன் படி பார்க்கும் போது ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணியாக எப்போதுமே முதலில் சென்னை அணி இருந்து வருகிறது. இதற்கு காரணம் சென்னை அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி தான். ‘தல தோனி’ என்று சென்னை அணி ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு என்ன முடியாத அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதனுடைய விளைவு தான் இன்ஸ்டாகிராமில் இத்தனை ஃபாலோவர்ஸ்.

Read More :- IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் 14.2 M (14 கோடியே 20 லட்சம்) ஃபாலோவர்ஸை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்த படியாக மும்பை அணி இருந்து வந்தது. ஆனால், மும்பை அணியில் ஏற்பட்ட குழப்பங்களின் விளைவாக அந்த அணி  இன்ஸ்டாகிராமில் பயங்கர பின்னடைவை சந்தித்தது. இதனால், 2-வதாக பெங்களூரு அணி 13.1 M ஃபாலோவர்ஸை வைத்துள்ளது. 3-வதாக மும்பை அணி 12.8 M ஃபாலோவர்ஸை கொண்டுள்ளது.

Read More :- சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட 5 ஐபிஎல் அணி எது தெரியுமா ?

அதன் பின் 4-வதாக கொல்கத்தா அணி 4.6 M ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளது. 5-வதாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3.7 M ஃபாலோவர்களை கொண்டுள்ளது. 6-வதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 M ஃபாலோவர்களை கொண்டுள்ளனர். அதே 3.6 M ஃபாலோவர்களை கொண்டு ராஜஸ்தான் அணி 7-வது இடத்தில் உள்ளனர். 8-வது அணியாக சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் 3.4 M ஃபாலோவர்களை  கொண்டுள்ளது. 9-வதாக பஞ்சாப் லெவேன் அணி 3.1 M ஃபாலோவர்களை  கொண்டுள்ளனர். இறுதியாக லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 M ஃபாலோவர்களை  கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK Leader Vijay speech in TVK general committee meeting
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu