ஐசிசி அவ்வப்பொழுது வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருவது வழக்கம். வீரர்களின் அப்போதைய பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றைப் பொறுத்து இந்த தரவரிசையில், புள்ளிகள் மாறுவதுண்டு.
நமது இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் வீரர்களைக் கொண்டுள்ள அணியாகவே திகழ்ந்து வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பந்த் பேட்ஸ்மேன் களுக்கான தரவரிசையில் 801 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 746 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்திலும் உள்ளார்.
பந்து வீச்சில் அஸ்வின் 842 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்திலும் , ஜாஸ்பிரித் பும்ரா 828 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 384 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 335 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் விராட் கோலி 744 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், 740 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா மட்டுமே டாப் 10 இல், 662 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்டிக் பாண்டியா 13வது இடத்தில் இருக்கிறார்.
டி-20 போட்டிகளில் பேட்டிங்கில் மிகச்சிறப்பாக விளையாண்டு வரும் சூரியகுமார் யாதவ் 755 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 682 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், ஆல்ரவுண்டர் தர வரிசையில் ஹர்டிக் பாண்டியா 7வது இடத்திலும் உள்ளனர்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…