துபாய் இல் நடந்த ஆசியக் கோப்பை 2022 இன் பரபரப்பான இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 6 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
மொத்தம் 6 அணிகளுடன் ஆரம்பித்த ஆசியக் கோப்பையில் ஹாங்காங், மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதிச் சுற்றுடன் வெளியேறின. சூப்பர் 4 க்கு குரூப் A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் குரூப் B இல் இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றன.
சூப்பர் 4 இல் நடைபெற்ற எந்த ஆட்டத்திற்கும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை. இந்தியா, தான் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்று இந்திய ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. ஆப்கானிஸ்தனை வென்றது சற்று ஆறுதலாக இருந்தது.
இலங்கை அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் வென்றதுடன் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் அமர்ந்தது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் முதல் 2 இடத்தைப் பிடித்த இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானக பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை குவித்தது.
அடுத்ததாக 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக பனுக்கா ராஜபக்ஷாவும், தொடர் நாயகனாக வணிந்து ஹசரங்காவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
இறுதிப் போட்டியில் வென்றதற்கு பரிசுத்தொகையாக $150,000 இலங்கை அணிக்கு கிடைத்தது. மேலும் 2ஆம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிக்கு $75,000 பரிசுத்தொகை கிடைத்தது. தொடர் நாயகனான வணிந்து ஹசரங்கா $15,000 பரிசுத்தொகையைப் பெற்றுக் கொண்டார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…