கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் தொப்பி எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா.?

Default Image

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பி 2.51 கோடி ரூபாய் ஏலம்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக புகழப்படும் ஆஸ்திரேலிய வீரரான டான் பிராட்மேனின் பச்சை நிற டெஸ்ட் போட்டி தொப்பியை அந்நாட்டு வியாபாரி ஒருவர் 450,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு சுமார் 2.51 கோடி ரூபாய் ஏலம் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிராட்மேனின் பச்சை நிற தொப்பியை 1928 ல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் பிராட்மேன் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 1928 முதல் 1948 வரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போதுவரை போற்றப்படுகிறது.

இந்நிலையில், கிரிகெட் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போனது பிராட்மேனின் பச்சை நிற தொப்பிதான். இதனிடையே, இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டு வகையில், லெக் ஸ்பின்னர் ஷேன் வார்னின் தொப்பி 10 லட்சத்தி ஏழாயிரத்தி 500 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (சுமார் 5.61 கோடி) ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்