T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளை கடந்து விளையாடி வருகிறது. இதில் குறிப்பாக ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது.
இதன் காரணமாக இந்திய இளம் வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை ஐபிஎல்லில் வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபக்கம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிசிசிஐ அதற்கான வேலையில் இறங்கியுள்ளது.
அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ ஒரு ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அப்போது இந்திய அணி வீரர்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பந்து வீச வேண்டும் என்று விரும்புவதாகவும், ரோஹித்துடன் கோலி ஓப்பனிங் செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. இதனால் இளம் ஓப்பனிங் வீரர்களான ய்ஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஒரு மாற்று வீரர்களாக பயன்படுத்தவும் ஆலோசனையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த ஐபிஎல் தொடரை பொருட்படுத்தாமல் 10 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகிய 10 இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இதில், ஆடும் லெவனில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த 10 பேர் உட்பட மொத்தம் 20 பேர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங்.
ஆல் ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, அக்சர் படேல்.
ஸ்பின்னர்கள்: குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய்.
விக்கெட் கீப்பர்-பேட்டர்: ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான்.