ஃபினிஷிங்கில் எனக்கு குருநாதர் அவர் தான் : தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்7
இலங்கை , வங்கதேசம், இந்தியா என மூன்று நாடுகளுக்கிடையில் நடைபெற்ற முத்தரப்பு T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவுடன் இறுதிபோட்டியில் மோதியது வங்கதேச அணி.
இதில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி இலக்கை துரத்த மிகவும் கஷ்டப்பட்டது. கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் எடுக்கவேண்டும் இதில் 19வது ஓவரில் 22 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அவுட் ஆக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அதனை நிதானமாக சந்தித்து சிக்சர் பறக்கவிட்டார். நம்ம ஊர் பையன் தினேஷ் கார்த்திக். இதில் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இலங்கை ரசிகர்களும் கொண்டாடினர்.
இதனை குறித்து அவர் பேட்டியில் கூறுகையில், சிறந்த அனுபவங்களே இந்த மாதிரி நிதானமான ஆட்டங்களில் உதவி செய்யும் மேலும் இதேபோல் பலமுறை ஆடியுள்ள தோனியிடம் தான் இதனை கற்று கொள்ள முடியும். கஷ்டமான காலங்களில் எப்படி நிதானமாக ஆடவேண்டும் என்பதை தோனியிடம் தான் நான் கற்று கொண்டேன் என கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்