‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Published by
அகில் R

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜூன்-2 ம் தேதி அன்று 9-வது உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இதில் கலந்து கொள்ளவிருக்கும் நாடுகள் தற்போது விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு கொண்டே இருக்கின்றனர். அதிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மிகப்பெரிய அணிகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது அணிகளின் பட்டியலை வெளியிட்டனர்.

இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் ரிங்கு சிங் மாற்று வீரராக அதாவது ரிசர்வ் வீரராக தேர்வாகி இருந்தார். இது அவரது ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இவர் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக, குஜராத் அணிக்கு எதிராக 5 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்ததன் மூலம் இந்திய அணிக்கு ஒரு புதிய பினிஷர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டார்.

மேலும், அவர் 2023 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு, தென் ஆப்ரிக்கா தொடர், இந்த ஆண்டு நடைபெற்ற ஆப்கனிஸ்தான் டி20 தொடர்களில் ஒரு பினிஷராக செயல்பட்டு இந்தியா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினானார். தற்போது இவரை டி20 அணியில் ஒரு ரிசெர்வ் வீரராக எடுத்திருப்பதால் அவரது குடும்பத்தினர்கள் மனம் உடைந்து உள்ளனர். இதை குறித்து பத்திர்கையாளர்களிடம் பேட்டி அளித்த ரிங்கு சிங்கின் தந்தை கான் சந்திர சேகர் பேசிய போது, “எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைசியில் வெறும் ஏமாற்றம் தான் எங்களுக்கு மிஞ்சியது.

இந்தியாவின் முதன்மை அணியில் ரிங்கு சிங் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் காத்திருந்தோம், ஆனால் அவரை  ரிசர்வ் வீரராக தான் எடுத்துள்ளனர். அவர் ரிசர்வ் வீரராக எடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான் இருந்தாலும் எங்களுக்கு அது ஒரு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது. ரிங்கு அவரின் அம்மாவிடம் இது குறித்து பேசிய ஏமாற்றத்தை சந்தித்தார், மேலும் மனம் உடைந்து விட்டார்”, என்று ரிங்கு சிங்கின் தந்தை கான் சந்திர சேகர் பத்திர்கையாளர்களிடம் பேசினார்.

Published by
அகில் R

Recent Posts

முயற்சி பண்ணியும் முடியல…கவனமா இருங்க ப்ளீஸ்…பாடகி ஸ்ரேயா கோஷல் வேதனை!

சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…

14 minutes ago

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை..விஜய் தனியாக தான் போட்டியிடுவார் – பிரசாந்த் கிஷோர்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…

46 minutes ago

ENG vs SA : அதிரடியுடன் ஆறுதல் வெற்றிபெறுமா இங்கிலாந்து! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில்  இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…

1 hour ago

தென் மாவட்டங்களை சூழும் கருமேகம்… இன்று 6 மாவட்டங்களில் கனமழை!!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…

2 hours ago

தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?

நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…

2 hours ago

இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…

3 hours ago