சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்… சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடவில்லை.!
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எந்த போட்டியும் இல்லை.
இந்தியன் பிரீமியர் லீக் 2021 இன் அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சற்று நேரத்திற்கு முன் அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் போட்டி அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மோதவுள்ளது. 56 லீக் போட்டிகளில், சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானத்தில் தலா 10 போட்டிகளையும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிளேஆஃப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் குறிப்பாக எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 10 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இருப்பினும் 10 போட்டியில் ஒரு போட்டியில் கூட சென்னை அணி சென்னையில் விளையாடவில்லை. இதனால், மீண்டும் சென்னை ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
சென்னை அணியின் அனைத்து போட்டிகளும் மும்பை, பெங்களூரு மைதானத்தில் விளையாடுகின்றனர். பிற்பகல் விளையாட்டுக்கள் 3:30 மணிக்கும், மாலை விளையாட்டுகள் 7:30 மணிக்கும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.