சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இதுவரை படைத்த சாதனைகளை பற்றி விவரமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பாண்டு தொடரில் மே 22 -ல் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் மைதானத்தில் ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்தி ஐபிஎல் போட்டிகளில் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம். முதல் சாதனை என்னவென்றால், ஐபிஎல் போட்டிகளில் அதிகப்போட்டிகள் விளையாடிய 2-வது வீரர் என்ற சாதனை தான். இதுவரை 257 போட்டிகளில் அவர் விளையாடி இருக்கிறார்.
கொல்கத்தா அணிக்காக தினேஷ் கார்த்திக் 2018 – 2020 வரை கேப்டனாக விளையாடி 19 போட்டிகளை வெற்றிபெற்று கொடுத்து இருக்கிறார். இதன் மூலம், கொல்கத்தா அணிக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த 2-வது கேப்டன் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். கெளதம் கம்பீர் (61) வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
அதைப்போல, ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்து அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்தி படைத்துள்ளார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் 4463 ரன்கள் எடுத்துள்ளார். முதல் இடத்தில், 5000 ரன்களை கடந்து தோனி இருக்கிறார்.
அதைப்போல, ஐபிஎல் வரலாற்றில் 6 அணிக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையும் தினேஷ் கார்த்தி தான் படைத்தது இருக்கிறார். 2011- ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக முதன் முதலாக விளையாடிய அவர் (2008-2010, 2014) ஆகிய ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், (2012,2013) ஆகிய ஆண்டுகளில் மும்பை அணிக்காகவும் , (2016-2017) ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணிக்காகவும் , (2018,2021) ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காகவும்,2015, 2022-2024 ஆகிய ஆண்டுகளில் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…