தினேஷ் கார்த்திக் ஐபிஎல் பயணம்! டெல்லி முதல் பெங்களூர் வரை செய்த சாதனை!

dinesh karthik ipl rcb

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இதுவரை படைத்த சாதனைகளை பற்றி விவரமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பாண்டு தொடரில் மே 22 -ல் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் மைதானத்தில் ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்தி ஐபிஎல் போட்டிகளில் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம். முதல் சாதனை என்னவென்றால், ஐபிஎல் போட்டிகளில் அதிகப்போட்டிகள் விளையாடிய 2-வது வீரர் என்ற சாதனை தான். இதுவரை 257 போட்டிகளில் அவர் விளையாடி இருக்கிறார்.

கொல்கத்தா அணிக்காக தினேஷ் கார்த்திக் 2018 – 2020 வரை கேப்டனாக விளையாடி 19 போட்டிகளை வெற்றிபெற்று கொடுத்து இருக்கிறார். இதன் மூலம், கொல்கத்தா அணிக்காக அதிக வெற்றிகளை தேடி தந்த 2-வது கேப்டன் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். கெளதம் கம்பீர் (61) வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

அதைப்போல, ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்து அதிகம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்தி படைத்துள்ளார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் 4463  ரன்கள் எடுத்துள்ளார். முதல் இடத்தில், 5000 ரன்களை கடந்து தோனி இருக்கிறார்.

அதைப்போல, ஐபிஎல் வரலாற்றில் 6 அணிக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையும் தினேஷ் கார்த்தி தான் படைத்தது இருக்கிறார். 2011- ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப்  கிங்ஸ் அணிக்காக முதன் முதலாக விளையாடிய அவர் (2008-2010, 2014) ஆகிய ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், (2012,2013)  ஆகிய ஆண்டுகளில் மும்பை அணிக்காகவும் , (2016-2017)  ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணிக்காகவும் , (2018,2021) ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காகவும்,2015, 2022-2024 ஆகிய ஆண்டுகளில் பெங்களூர் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
vaibhavsuryavanshi
Zipline operator
Ajith Kumar Pahalgam attack
Rajasthan Royals WON
Vaibhav Suryavanshi