வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற தமிழர்கள்…!!

Published by
Dinasuvadu desk

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி  போட்டியில் இந்திய அணி  5 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி  போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான்  ஜோடி அடுத்து அடுத்து ஆட்டம் இழந்தனர்.அதன் பின்னர் களமிறங்கிய சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடி 77(50) ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர் அந்த அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  166 ரன்கள் எடுத்தது .சஹல் அதிக பட்சமாக 3 விக்கெட் எடுத்தார்.

பின்னர்  இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் – தவான் களமிறங்கினர் இருவரும் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தவான் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார் .அதன் பின் களமிறங்கிய ரெய்னா அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ருபெல் பந்தில் டக் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மா அரைசதம்:

அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் ருபெல் பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 42 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நஷ்முல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.மேலும் இது ரோஹித் சர்மாவின் 14வது டி20 அரைசதமாகும்.மனீஷ் பண்டே 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் . விஜய் சங்கர் 17(19) ஆட்ட மிளக்க மற்றும் தினேஷ் கார்த்திக் 29(8) மற்றும் வாஷிங்டன் சுந்தர்  ஆட்டம் கடைசி ஒரு பந்து மிஞ்சிய நிலையில் 6 அடித்து இழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர் .

ஆட்ட நாயகனாக 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் முத்தரப்பு டி20யின் தொடர் நாயகனாக சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.18 வயதில் தொடர் நாயகன் விருது பெரும் மூன்றாவது நபர் ஆவார். இவருக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான்,சதாப்ஹான் ஆகியோர் உள்ளனர்.

ஒரே ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Dinesh Karthik,  is the Player of the Match.

Meet your Player of the Series, Washington Sundar. He’s just eighteen.

DK

MAN OF THE MATCH : DK

MAN OF THE SERIES : WASHINGTON SUNDAR

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

2 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

5 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

6 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

6 hours ago