IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார்.
Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!
அவரது இந்த ஐபிஎல் பயணத்தில் அனைத்து சீசனிலும் தினேஷ் கார்த்திக் அவரது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார். 2011- ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதன் பின், 2012-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், கார்த்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் தொடர்ந்து, அவர் மும்பை அணிக்காக தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2012,2013) விளையாடினார். அப்போது தான் 2013 சீசனில் கோப்பையை வென்ற மும்பை அணியில் அவர் பங்காற்றினார்.
இன்று வரை தினேஷ் கார்த்திக் ஒரு ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளார் என்றால் அது 2013-ம் ஆண்டு தான். டெல்லி, மும்பை, குஜராத் லயன்ஸ், பெங்களூரு, பஞ்சாப், கொல்கத்தா போன்ற 6 ஐபிஎல் அணிகளுக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு பெங்களுரு அணிக்காக விளையாட உள்ளார். இவர் ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 240 போட்டிகளில் விளையாடி 26 சராசரிகளுடன் 4516 ரன்களை குவித்து, 36 ஸ்டம்பிங்குகள் எடுத்து தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்சமானாக தனது பெயரை யாரும் மறக்காத வண்ணம் செய்துள்ளார்.
Read More :- IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் தன்னை வர்ணனையாளராகவும் (Commentator) அறிமுகம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து ஹண்ட்ரட் (The Hundred) உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முக்கிய வர்ணனையாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது, நடைபெற்று வரும் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வர்ணனை செய்து வருகிறார்.
மேலும், இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை விளையாடிவிட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க உள்ளார் எனவும் அவரது சர்வேதச கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்தும் ஆலோசிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் 2024 தொடர் நிறைவடைந்த பிறகே அதிகாரபூர்வ தகவலை தினேஷ் கார்த்திக் வெளியிடுவார் என தெரிகிறது.