விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் கேப்டனாக தினேஷ் கார்த்திக்..!
உலகக்கோப்பை தொடரில் இடம் பெற்று இருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்.தற்போது இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறவில்லை , இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி முதல் அக்டோபர் 16-ம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவர் செந்தில்நாதன் கூறுகையில் , அனுபவத்தின் அடிப்படையிலும் , சக வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் தினேஷ் கார்த்திக்கை செய்து உள்ளதாக கூறினார்.
தினேஷ் கார்த்திக் 2016-17 -ம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 9 போட்டிகளில் விளையாடி 2 சதம் , 4 அரைசதம் என 607 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.