ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்…பிரியாவிடை கொடுத்த விராட் கோலி!
சென்னை : பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது ஓய்வு ஐபிஎல் தொடரிலிருருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடர் 2024 தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தெரிவித்தது போல நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்த்துள்ளார்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஆரசிபி அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு சிறப்பான தொடராகவே அமைந்தது முதல் 8 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 1 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதனை அடுத்து தொடர்ந்து 6 வெற்றிகளை குவித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு தனது பங்கை தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆற்றியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி முடிவடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது விக்கெட் கீப்பிங் கையுறையை (கிளவுஸை) தூக்கி காண்பித்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவரது ஓய்வுக்கு சக ஆர்சிபி வீரர்கள் தங்களது பிரியாவிடையை அளித்தனர். களத்தில் இருந்த விராட் கோலி அவரை கட்டி அனைத்து தனது பிரியவிடையை தினேஷ் கார்த்திக்கு அளித்தார். தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 15 போட்டிகளில் விளையாடி 326 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அவர் 257 போட்டிகளில் விளையாடி 4842 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் 6 அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். அதில் 2013-ம் ஆண்டு மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் போது அந்த அணியில் பங்காற்றி இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் அவருக்கு ஒரு நல்ல ஃபேர்வெல் அமையவில்லை என கவலையில் இருந்து வருகின்றனர்.