தினேஷ் கார்த்திக் நோ, ரிஷப் பந்த் தான் சரியான தேர்வு- ஹைடன்
ரிஷப் பந்த் தான், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.
டி-20 உலகக்கோப்பையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் சில போட்டிகளாக ரன் குவிக்க திணறி வருகிறார்.
மேத்தியூ ஹைடன் இது குறித்து பேசும் போது, ரிஷப் பந்த்தின் இடம் குறித்து இந்திய அணியில் அவ்வப்போது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ரிஷப் பந்த்திற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும், அவர் ஒரு அற்புதமான வீரர்.
அவரைப் போன்ற வீரருக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால், என்னுடைய தேர்வு ரிஷப் பந்த் ஆக இருக்கும் என்றும் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.