பெங்களூர் ரசிகர்களால் தான் உலகக்கோப்பையில் இடம்பிடித்தேன்! தினேஷ் கார்த்திக் எமோஷனல்!
தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024) ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்தார். அந்த வகையில், சமீபத்தில் பெங்களூரு அணி க்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவில் பேசிய தினேஷ் கார்த்திக், 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் அணியால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “பெங்களூர் அணிக்காக நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தான் எனக்கு ரசிகர்கள் அதிகமானதாக நான் நினைக்கிறேன். எங்களுடைய அணியில் விராட் கோலி மிக மிக பெரிய பெயர் மற்றும் அவர் ஆர்சிபியின் பெரும் பகுதி. ஆனால், ரசிகர்கள் அதை விட பெரியது. நான் இந்த அணிக்காக விளையாடிய காரணத்தால் பெற்ற அன்பின் அளவு வார்த்தைகளால் என்னால் சொல்லவே முடியாது.
பெங்களூர் ரசிகர்களால் தான் 2022 உலகக் கோப்பைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சில சமயங்களில் நினைப்பேன். டிகே போட்டியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்’ என்று மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்ததை எப்போதுமே என்னால் மறக்கவே முடியாது. 37 வயதில் நான் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்தபோது, நான் எனது நாட்டிற்காக விளையாடிய சிறிய கட்டத்தில் பெங்களூர் அணியும் ரசிகர்களும் மிக முக்கியமான பங்கை வகித்ததாக உணர்கிறேன்” எனவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
மேலும், ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது பெங்களூர் அணி தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு வாங்கியதிலிருந்து, தினேஷ் கார்த்திக் அணியின் ஒரு முக்கிய நபராக மாறினார் என்றே சொல்லலாம். ஆர்சிபியின் ரசிகர் பட்டாளம் பெரும்பாலும் தினேஷ் கார்த்தியின் ஆட்டத்தை பார்த்து அவருக்காகவே மைதானத்திற்கு வந்து போட்டியை காண்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
We’ve seen his friends and colleagues sing praises and give him a fitting farewell from the game, and thanks to the humble and understated character that he is, we had to push DK to speak about the highs and lows of his career, and the love he’s been getting from RCB fans and… pic.twitter.com/p7oXLr3BgK
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 24, 2024