சர்ச்சைக் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், தினேஷ் கார்த்தி வர்ணனை பணியின் போது ” பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல” என்று கூறியிருந்தார். அவர் கூறியது பெண்களைப் பற்றிய தரக்குறைவான கருத்து இதனால் தினேஷ் கார்த்திக் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பலர் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், உள்நோக்கத்தோடு அப்படி கூறவில்லை என தனது பேச்சுக்கு அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் கூறியது , ” கடந்த போட்டியின் போது நான் கூறிய கருத்துக்கு தவறு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் மனதார அப்படிக் கூறவில்லை. அப்படி கூறியது தவறு என புரிந்து கொண்டேன். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக அப்படிக்கூறியது தவறு தான் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…