கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர் தலைமையில் 2012 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.பின்பு கொல்கத்தா அணியில் இருந்து கம்பீர் விடுவிக்கப்பட்ட பின்னர் அந்த அணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்து வருகிறார்.இவரது தலைமையில் கொல்கத்தா அணி கடந்த 2018 -ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.கடந்த ஆண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது கொல்கத்தா அணி. இந்த ஆண்டு கொல்கத்தா அணி 7 போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் , 4 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்திக் விலகுவதாக அறிவித்துள்ளர். இது தொடர்பாக அணி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக ,அணியின் கேப்டன் பதவியை இயன் மோர்கனிடம் ஒப்படைக்க விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “தினேஷை போன்ற ஒருவர் இது போன்ற ஒரு முடிவை எடுக்க நிறைய தைரியம் தேவை. அவரது முடிவால் நாங்கள் ஆச்சரியப்பட்டாலும், அவருடைய விருப்பங்களை நாங்கள் மதிக்கிறோம். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற கேப்டனான இயன் மோர்கன், அணியை வழிநடத்த தயாராக இருப்பதும் எங்களுக்கு அதிர்ஷ்டம் தான் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…