எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

அஸ்வினி குமாருக்காக எதற்காக 5-வது ஓவரை கொடுக்கவில்லை என ஹர்திக் பாண்டியாவை நெட்டிசன்கள் விமர்சித்து பேசி வருகிறார்கள்.

ashwani kumar HARDIK

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச் 31, 2025 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய அறிமுக வீரர் அஸ்வினி குமார் முத்திரை பதித்தார். அவர் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல் அறிமுகத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவருடைய அசத்தல் பந்துவீச்சை காரணமாக கொல்கத்தா அணி 116 ரன்களில் அட்டமிழந்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வனி குமாருக்கு அவரது நான்காவது ஓவரை வழங்காத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் முடிவு சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் (X) தளத்தில், பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நெட்டிசன்கள் பலர், ஹார்திக் பாண்டியா அஸ்வினிக்கு நான்காவது ஓவரை வழங்கியிருந்தால், அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேலும் பெரிய சாதனையைப் படைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். பலரும் “ஹார்திக் அஸ்வனி குமாருக்கு பந்துவீச்சு கொடுத்திருந்தால், அவரது அறிமுகம் 5 விக்கெட்டுகளுடன் சிறப்பாக அமைந்திருக்கும்,” எதற்காக நீங்கள் கொடுக்கவில்லை? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் சிலர் “ஹார்திக் இதை சரியாக கையாளவில்லை,” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர், மற்றவர்கள் “அஸ்வனியின் திறமையை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம்,” என்று புலம்பியுள்ளனர்.மற்றோரு பக்கம் ஹர்திக் பாண்டியா கேப்டன் எனவே அவர் மனதில் வேறு திட்டத்தை வைத்திருந்திருக்கலாம் எனவும் பேசி வருகிறார்கள். அவர் விக்கெட் எடுக்க கூடாது என்று ஹர்திக் பாண்டியா நிச்சயம் நினைத்திருக்க மாட்டார் எனவும் கூறி வருகிறார்கள்.


மேலும், அறிமுக போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வினி குமாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்