ரோஹித் சர்மா ஜெர்சி எண் 45-ஐ எதற்காக தேர்வு செய்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார், அவர் அடித்த இரட்டை சதத்தின் சாதனையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம், மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்களை வைத்து அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளி வைக்கபட்டத்து.
மேலும் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறினார். அதன் படி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார்.
மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்திருந்தார், மேலும் ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள்து வீட்டிலே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் வீட்டில் இருக்கும் ரோஹித் சர்மா சமீபத்தில் தனது சமூக வலைதளபக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
இந்நிலையில் அதில் ஒரு ரசிகர், ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்ணான 45 எதற்காக தேர்வு செய்திர்கள் என்று கேட்டார், அதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித் சர்மா, எனக்கு அந்த நம்பர் ராசியாக இருக்கும் என்று என் அம்மா சொன்னார். நான் அதனால் தான் தேர்வு செய்தேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…