ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவால் ஸ்டீவ் ஸ்மித், தனது கேப்டன் பதவியை பட்டலருக்கு கொடுக்கப்போறாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டன் பதிவிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவர் விலகியதால், புதிய கேப்டனாக இயோன் மோர்கன் நிர்ணயிக்கப்பட்டார். இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ் பட்டலரின் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தது, ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் பதிவில் இருந்து விலகுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் இந்த ட்வீட், பெருமளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், தினேஷ் கார்த்திக் தனது பதவியை ராஜினாமா செய்த நேரத்தில் இந்த பதிவு இருந்த காரணம், சந்தேகத்தை ஏற்படுத்தி, பெருமளவில் வதந்திகள் பரவியது.
அதுமட்டுமின்றி, நடப்பாண்டில் 8 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான், 3 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும், ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேனாகவும் சிறந்து விளங்கவில்லை என்ற காரணத்தினால் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாகவும் செய்திகள் பரவத் தொடங்கியது. இந்த செய்திகள் அனைத்தும் பொய் எனவும், இது பொய் எனவும் தெரிவித்தனர்.
அதனை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் அணி மீண்டும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டது. அதில் ஸ்டீவ் ஸ்மித் புகைப்படத்தை பதிவிட்டு, “கேப்டன்” என குறிப்பிட்டு, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…