ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை!! சனத் ஜெய்சூரியாவிற்கு 2 ஆண்டுகள் தடை!!
- சனத் ஜெயசூர்யா இவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
- விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெய்சூரியாவிற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார்.2013 முதல் 2015 வரையும், அதன்பின் 2017-ல் ராஜினாமா செய்யும் வரையிலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்தார்.
1996-ம் ஆண்டும் இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார் சனத் ஜெயசூர்யா.
பின் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது 2 வழக்குகளை பதிவு செய்தது.இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூர்யா, ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்தது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு.
இந்நிலையில் ஊழல் தடுப்புப்பிரிவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெய்சூரியாவிற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி.அதாவது கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பதவிகள் வகிக்க தடை விதித்துள்ளது.