ஒரு சின்ன தப்பால டி20 டீம்ல இடம் போச்சா? அப்படி தினேஷ் கார்த்திக் என்ன செஞ்சாரு?

Dinesh Karthik

Dinesh Karthik : ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் செய்த சிறிய தவறால் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ரங்களை சேர்த்து வருகிறார். கடந்த ஒரு சில போட்டிகளில் ஆர்.சி.பி அணி தோல்விகளை குவித்தாலும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் விழும்பு வரை பெங்களூர் அணி சென்றிருந்தது. அவரது அதிரடி ஆட்டத்தால் ஜூன் மாதம் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரை இந்திய அணியில் இடம்பெற வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டுக்கொண்டனர்.

அதே போல அவரும் அணியில் இடம் பெறுவர்  என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல், புரசலாக பேச்சுகள் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியுடன் போட்டியில் ஈடுபட்டது. இந்த போட்டியில் முதலில் பெட் செய்த கொல்கத்தா அணி  222 ரண்களை நிர்ணயித்தது. அதன் பிறகு களமிறங்கிய பெங்களூர் அணி 221 மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி போட்டியை த்ரில்லாக வென்றது.

ஒரு கட்டத்தில் போட்டி கைவிட்டு போனது என நினைத்தபோது தினேஷ் கார்த்திக் நின்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கடைசி இரண்டு ஓவர்களுக்கு அதாவது 12 பந்துக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் 3 பந்துகளை தினேஷ் கார்த்திக் சிங்கிள்ஸ் ஓடாமல், பவுண்டரியும் அடிக்காமல் டாட் (Dot)டாக்கி இருப்பார். மேலும் அதே ஓவரில் அடுத்த இரண்டு பந்தில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என பத்து ரன்கள் அடித்திருப்பார்.

இருந்தும் ஏழு பந்துக்கு 21 எண்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுப்பார் என எல்லாரும் கருதப்பட்டது.  அப்போது இந்த பந்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆகி இருப்பார். அதை அடிக்க முயன்று அவுட் ஆனதால் தான் பெங்களூரு அணி தோல்வியுற்றது என டிகே வை பெங்களூரு ரசிகர்கள் விமர்சித்து இணையத்தில் பேசி வருகின்றார். மேலும், அந்த போட்டியின் 19-வது ஓவரில் அவருடன் களத்தில் கரன் சர்மா இருப்பார்.

கரன் சர்மா அடிக்க மாட்டார் என 3 பந்துகளும் சிங்கிள்ஸ் கூட எடுக்காமல் இருப்பார் டிகே ஆனால் இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்சேல் ஸ்டார்க்கின் பந்தில் 3 சிக்ஸர்கள் விளாசி இருப்பார். இதனால் கரன் ஷர்மாவாலும் அடிக்க முடியும் என்றால் எதற்காக அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட எப்படி விளையாட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக்கு தெரியவில்லை இவரை டி20 அணியில் எடுத்தால் அங்கேயும் இது போல செய்யமாட்டார் என்பதில் என்ன நிச்சயம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகளும், கேள்விகளும் எழுந்து வருகின்றன. இதனால் இவர் வரவிற்கும் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வைய்ப்புகள் குறைந்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்