dhoni catch ipl 2024 [file image]
MS Dhoni : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எம்.எஸ். தோனி பிடித்த அசத்தலான கேட்ச் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது. இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின் போது தோனி கடைசி ஓவரில் சிக்ஸர் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தோனி களமிறங்கவில்லை எனவே ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றமாக அமைந்தது. அப்படி ஏமாற்றம் அடைந்த ரசிகர்களை மகிழ்விக்க தோனி அசத்தலான கேட்ச் ஒன்றையும் பிடித்து மகிழ்வித்தார். குஜராத் அணி பேட்டிங் செய்த சமயத்தில் விஜய சங்கர் டேரில் மிட்செல் பந்தை எதிர்கொண்டார்.
அப்போது விஜய சங்கர் அந்த பந்தை மெதுவாக தட்ட முயற்சி செய்த நிலையில் பந்து அவருடைய பேட்டில் பட்டு பின்னாடி இருந்த தோனியிடம் சென்றது. தோனி கிட்ட பந்து சென்றால் அந்த பந்தை தோனி விடுவாரா என்ன? அசத்தலாக டைவ் போட்டு அந்த பந்தை கேட்ச் பிடித்தார். தோனி பிடித்த இந்த அசத்தலான கேட்சை பார்த்து ரசிகர்கள் ‘தோனி…தோனி’ என கரகோஷமிட்டனர்.
தோனி கேட்ச் பிடித்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டியும் வருகிறார்கள். குறிப்பாக தோனி பிடித்த கேட்சை பார்த்துவிட்டு ரெய்னா ” தோனி கேட்ச் அருமை அவர்இப்படி செய்து நம்மளை ஊக்கவைத்து கொண்டு இருக்கிறார்” என பாராட்டினார். அதைப்போல ரசிகர்கள் பலரும் வயது மேட்டர் இல்ல வயசானாலும் அவர் சிங்கம் என்று கூறிவருகிறார்கள்.
மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதன் பின் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…