நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் தோனி 7 -வது வீரராக களமிறங்கினர்.இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் , லட்சுமண் ,கங்குலி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதை பற்றி சச்சின் கூறுகையில் , தோனியை ஏழாவது வீரராக களமிறங்கியது தவறு. அனுபவம் வாய்ந்த வீரர் தோனியை ஹர்திக் ,பண்ட் ஆகியோருக்கு முன்பாக களமிறங்கி இருக்க வேண்டும்.மேலும் ஐந்தாவது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கி இருக்க கூடாது என கூறினார்.
விவிஎஸ் லட்சுமண் கூறுகையில் , ஹர்திக் , தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருக்கும் முன் தோனி களமிங்கி இருக்க வேண்டும். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தோனி நான்காவது வீரராக களமிங்கி இந்திய அணி வெற்றி பெற செய்தார்.அதேபோல நேற்றைய போட்டியிலும் முன்பாக களமிறங்கி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்து இருக்கும் என கூறினார்.
கங்குலி இதை பற்றி கூறுகையில் ,தோனி , தினேஷ் கார்த்திக் முன்பாக இறங்கி இருந்தால் ரிஷப் பண்ட்டுவிற்கு உரிய ஆலோசனை வழங்கி இருப்பார்.மேலும் வேக பந்து வீச்சாளர் ஓவரில் பவுண்டரி அடிக்க அறிவுரை கூறி இருப்பார்.தோனி அந்த நேரத்தில் களத்தில் இருந்து இருந்தால் விக்கெட் சரிவில் இருந்து தடுத்து இருந்து இருப்பார்.குறிப்பாக தோனியை ஏழாவது வீரராக களமிறங்கியது மிக பெரிய தவறு என கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…