தோனியின் தன்னடக்கம் தான் எனக்கு பிடிக்கும் … டுவைன் பிராவோ.!
டுவைன் பிராவோ சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த வகையில் தோனியின் ஓய்வு குறித்து டுவைன் பிராவோ சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் , அதில் டுவைன் பிராவோ கூறியது தோனி ஓய்வு பெற்றது ஒரு பெரிய விஷயம் இல்லை கிரிக்கெட் பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தோனியை பிடிக்கும்.
தோனி உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் அவர் செய்த சாதனைகளை முறியடிக்க எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இல்லை என்றே கூறலாம், மேலும் தனக்கு கீழுள்ள இளம் வீரர்களுக்கு தோனி கூறும் கருத்துக்கள் மிகவும் பிடிக்கும் அதன் காரணமாக தான் அவர் இன்றுவரை நல்ல நிலையை எட்டியிருக்கிறார்.
மேலும் எனக்கு தோனியிடம் மிகவும் பிடித்தது தன்னடக்கம் தான். நான் பார்த்த மனிதர்களில் மிகவும் நேர்மையான ஒரு கிரிக்கெட் வீரர் தோனி தான் என்றும் கூறியுள்ளார், மேலும் கிரிக்கெட் விளையாட்டை தோனி மிகவும் நேசித்த விளையாடுகிறார் என்றும் கூறியுள்ளார்.