Australia tour: காலியாக உள்ளது தோனியின் இடம்.. மாற்று வீரராக களமிறங்கும் வீரர் யார்?
இந்திய அணியில் தோனியின் இடம் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்ப மாற்று வீரரை களமிறக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்:
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்த அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியானது. அதில் இளம் வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியின் இடம்:
இந்தநிலையில், கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வினை அறிவித்த நிலையில், அவரைத் தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வினை அறிவித்தார். இதனால் தோனியின் இடத்தை நிரப்ப மிடில் ஆர்டர் பேட்டிங், கீப்பிங் மற்றும் பிரஷரை தாங்க கூடிய வீரரை களமிறக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், மாற்று வீரரை களமிறக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமடைந்துள்ளது.
கீப்பர்:
இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்களை கீப்பராக தேர்வாக வாய்ப்புள்ளது. தற்பொழுது தோனியை தொடர்ந்து, இந்திய அணியில் நன்றாக கீப்பிங் செய்யும் வீரர்களாக 4 பேர் இருக்கிறார்கள். அது; தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல். இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கே.எல் ராகுல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அற்புதமான பார்மில் இருப்பவர், கே.எல்.ராகுல். இவர் ஆடிய பெரும்பாலான போட்டிகளில் 50 ரன்களை கடந்து, அணியின் ஸ்கொரை உயர்த்த அதிகளவிலான பங்குகளை வகித்தவர். ஐபிஎல் மட்டுமின்றி, இந்திய அணியிலும் கீப்பிங்கிலும் அபாரமான செயல்பட்டதால், இந்திய அணியில் கே.எல்.ராகுல் தேர்வாக அதிகளவில் வாய்ப்புள்ளது.
ரிஷப் பண்ட்:
ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அதிரவிட்ட பண்ட், தகாயம் காரணமாக இரண்டு போட்டிகளில் ஆடவில்லை. அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். இந்திய அணியில் இதற்கு முன் நடந்த போட்டிகளில் அவரின் அபாரமான ஆட்டம் காரணமாக அவரும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
மாற்று வீரர்:
மறுபுறத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிவந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சற்று ஸ்லொவாக ஆடி வருகின்றனர். இவர்களில் ஒருவர், மாற்று வீரராக எடுக்க வாய்ப்புள்ளது. அதில் தினேஷ் கார்த்திக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணி சார்பாக தோனிக்கு அடுத்த அதிகளவில் கீப்பிங்கில் நன்றாக விளங்கியவர். இதனால் இவரை மாற்று வீரராக எடுக்க அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.