ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுக்கு தோனி விரித்த வலை… வீடியோ வைரல்.!

Published by
Muthu Kumar

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுக்கு தோனி வைத்த பீல்டர், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. முடிவில் குஜராத் அணி, சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் குஜராத் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. இதில் தற்போது குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுப்பதற்காக தோனி அமைத்த பில்டிங் வியூகம் குறித்து ரசிகர்கள் பெரிதும் பேசி வருகின்றனர். அதாவது ஹர்திக் பாண்டியா விளையாடிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு ஆப்சைடு திசையில் ஒரு பீல்டரை வைத்தார்.

இதன்படி தீக்ஷனா வீசிய அடுத்த பந்தில் ஹர்திக் பாண்டியா, கேட்ச் கொடுத்து விக்கட்டை இழந்தார், இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

16 minutes ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

46 minutes ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

1 hour ago

மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள்!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…

1 hour ago

சொந்த மண்ணில் வீழ்ந்த பெங்களூர்! தோல்விக்கான காரணங்கள் என்ன ?

பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…

2 hours ago

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago