‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK Fan-MSDhoni

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர் மனம் நெகிழ வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அனைத்து வயதினரும் சிஎஸ்கே  அணிக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதே போல 103 வயதான ஒரு சிஎஸ்கே ரசிகர் தான் ராமதாஸ், இவரை முன்னரே சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தனியாக பேட்டி ஒன்று எடுத்து X தளத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவும் வைரலாகி கொண்டிருந்தது.

அந்த பேட்டியில் ராம்தாஸ் தாத்தா, தான் ஒரு சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகன் எனவும், டி20 போட்டிகளை மிக தீவிரமாக விரும்பி பார்ப்பேன் எனவும், மேலும் தான் தோனியை பார்க்க தயாராக உள்ளதாகவும் கூறி இருந்தார். மேலும், அவரது வயதை சுட்டிகாட்டி அவரது மகன் பேசிய போது அவர், “ஐ ஆம் நாட் கிழவன் .. ஐ ஆம் யூத்” என்று பதிலளித்திருப்பார். அந்த பேட்டி எடுத்த வீடியோவையும் சிஎஸ்கே அணி தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

அந்த வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாக பரவி வந்த நிலையில்,  சற்று முன்பு  சிஎஸ்கே நிர்வாகம் மேலும் ஒரு வீடியோவை தங்கள்து X தளத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் 103 வயது நிரம்பிய அந்த ரசிகரான ராமதாஸை, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான ‘தல’ தோனி சந்தித்து அவருக்கு ராமதாஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட சிஎஸ்கே அணியின் ஜெர்ஸியை பரிசாக அளித்தார்.

மேலும், அந்த ஜெர்சியை வெறுமனையாக கொடுக்காமல் அதில், “தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்” என்று எழுதி மேலும் ‘தல’ தோனி அதில் அவரது கை எழுத்தையும் இட்டு பரிசாக அளித்தார். அதை பெற்று கொண்ட ராமதாஸ் தாத்தாவும் கை எடுத்து கும்பிட்டு, ” இது எனக்கு ஒரு பெரிய விஷயம், நான் மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கிறேன்”, என்று பதிலளித்தார். இந்த வீடியோவானது பார்ப்போரின் மனதை நெகிழ வைத்துள்ளது. மேலும், சிஎஸ்கே ரசிகர்களால் இந்த வீடியோ பகிரப்பட்டும் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar