மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கைது..!!

MSDhoni [file image]

MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.

இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது முன்னாள் தொழில் பங்குதாரர் ஆன மிஹிர் திவாகர் மோசடி வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தோனி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவியான சௌமியா தாஸ் ஆகியோர்களுடன் ஒப்பந்தம் செய்து இருந்தார். அது என்னவென்றால் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒரு கிரிக்கெட் அகாடமிகளை நிறுவி கிரிக்கெட் பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால், ஒப்பந்தம் போட்டதில் இருந்து அதை இருவரும் கண்டுகொள்ளாமல் இருவரும் சுமார் ரூ.16 கோடியை ஏமாற்றியதாக கூறி எம்.எஸ்.தோனி முன்னதாக குற்றம் சாட்டினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டின் போது தோனியின் பெயரில் உலகம் முழுவதும் ஆங்காங்கே கிரிக்கெட் அகாடமிகளைத் திறக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கிரிக்கெட் அகாடமியை திறப்பது உள்ளிட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஒரு நிபந்தனைகளையும் திவாகர் கடைபிடிக்கவில்லை என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று எம்.எஸ்.தோனி ஆர்கா ஸ்போர்ட்ஸிற்கான அங்கீகாரக் கடிதத்தை வாபஸ் பெற்றதுடன் அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நோட்டீஸ்களையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின் அந்த நோட்டீஸ்களை திரும்ப பெற்றதும் இல்லாமல் தோனியின் பெயரில் விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம், மற்றும் அகாடமிகளை திறந்து அதில் லாபம் ஈட்டி வந்துள்ளனர். இது தொடர்பான எந்த ஒரு தகவலோ அல்லது அதன் மூலம் பெற்ற லாபத்தையோ தோனியிடம் தெரிவிக்காமல் இருந்ததாக தோனியின் வழக்கறிஞர் தொடுத்த வழக்கில் கூறி இருக்கிறார். இதன் அடிப்படையில் மோசடி வழக்கின் பெயரில் மிஹிர் திவாகரை கடந்த செவ்வாய்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்