உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பும்ரா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல கருத்துக்கள் எழுந்தது. ஆனால் தோனி இதுகுறித்து மௌனம் சாதித்தார். ஆனால் தற்போது 2 மாதங்கள் மட்டும் ஓய்வு பெற்று இராணுவ பணியாற்றுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் வெளிவந்த பதிவு ஒன்றில் ” உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கும். தனது ஓய்வு குறித்து பல வதந்திகள் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விலக இது சரியான நேரமில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன். ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை” என்றவாரு பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளூ டிக் இருப்பதால் உண்மை என்று பலர் நம்ப தொடங்கினர். ஆனால், இது தோனியின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…