தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

ஐபிஎல் 2025 -22 வது போட்டியில் பஞ்சாப் அணி, சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Csk vs Punjab

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பின்னர், 220 என்கிற இமாலய இலக்கை துரத்திய சென்னை அணி கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை வீரர்களில், கான்வே (69), டூபே (42) மற்றும் ரச்சின் (36) ரன்கள் எடுத்தனர். இறுதியாக 18 ரன்கள் வித்யாசத்தில் பஞ்சாப் அணியிடம் சென்னை அணி பணிந்தது. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும், சென்னை அணிக்கு நான்காவது தோல்வி ஆகும்.

நேற்றைய ஆட்டத்தின் போது, குறிப்பாக பார்க்க வேண்டுமென்றால் பஞ்சாப் அணியில் விக்கெட்கள் தொடர்ந்து சரிந்தாலும், இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா, 43 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். டெல்லியைச் சேர்ந்த ப்ரியான்ஷ், டெல்லி ப்ரீமியர் லீக்கில் கெத்தாக ஆடியுள்ளார். ஒரே போட்டியில் 50 பந்துகளில் 120 ரன்கள், அதிலும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தார். சையது முஸ்தாக் தொடரிலும் 43 பந்துகளில் 102 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடருக்கு தேர்வாகியுள்ளார்.

மறுபுறம் ஆட்டங்களை முடித்து வைப்பதில் வல்லவரான தோனிக்கு இந்த சீசன் மிக மோசமாக அமைந்துள்ளது. முதல் வெற்றியை தொடர்ந்து தோல்வி பின் தோல்வி பெற, அடுத்தடுத்த போட்டிகளில் தோனி இருக்கிறார் வெற்றி நிச்சயம் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. நேற்றைய ஆட்டத்திலும் அது மாறவில்லை.

நேற்று 5வது வீரராக களமிறங்கிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். எனினும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்