16 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, இந்திய மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் தோனி. இவர் இந்தியாவுக்காக அனைத்து உலக வகை கோப்பையையும் பெற்றுத் தந்தவர். இவரது ஓய்வு பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. ஆனாலும், சரியான நேரத்தில் தனது ஓய்வு அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவரது ஸ்டைலேயே விடைபெற்றார்.
தன்னுடைய ஓய்வுக்குப் பின் ஒரு பலமான அணியையும் உருவாக்கி தந்துள்ளார். தற்போது, இந்திய அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் தோனியின் தலைமையில் உருவாகியவர்கள் என்று சொல்வதற்கு மறுப்பு ஏதுமில்லை. இந்திய அணிக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது பங்களிப்பு அதிகம் உள்ளது. அவர் தற்போது மைதானத்தில் இல்லையென்றாலும் அவரது பெயர் பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், நாளையுடன் கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதாவது, 2004 டிசம்பர் 23-ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி மூலம் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி அறிமுக வீரராக களமிறங்கியதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #16YearsOfIconicDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், தோனியின் சாதனைகளையும் அவர் எடுத்த ரன்கள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அவரது ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட் பற்றி ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்து இந்திய அணிக்கு பல பெருமைகளை சேர்த்த தோனிக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தும், கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டடி வருகின்றனர்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…