தோனியின் அறிமுகம்., 16 ஆண்டுகள்., ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.!

Default Image

16 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து, இந்திய மட்டுமின்றி உலக ரசிகர்களின் மனதில் மிக பெரிய இடம் பிடித்தவர் தோனி. இவர் இந்தியாவுக்காக அனைத்து உலக வகை கோப்பையையும் பெற்றுத் தந்தவர். இவரது ஓய்வு பலரையும் சோகத்தில் மூழ்கடித்தது. ஆனாலும், சரியான நேரத்தில் தனது ஓய்வு அறிவித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவரது ஸ்டைலேயே விடைபெற்றார்.

தன்னுடைய ஓய்வுக்குப் பின் ஒரு பலமான அணியையும் உருவாக்கி தந்துள்ளார். தற்போது, இந்திய அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் தோனியின் தலைமையில் உருவாகியவர்கள் என்று சொல்வதற்கு மறுப்பு ஏதுமில்லை. இந்திய அணிக்கு மட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது பங்களிப்பு அதிகம் உள்ளது. அவர் தற்போது மைதானத்தில் இல்லையென்றாலும் அவரது பெயர் பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நாளையுடன் கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து, தோனியின் ரசிகர்கள் சிறப்பு ஹாஷ்டாக் ஒன்றை பதிவு செய்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். அதாவது, 2004 டிசம்பர் 23-ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி மூலம் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி அறிமுக வீரராக களமிறங்கியதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் #16YearsOfIconicDhoni என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், தோனியின் சாதனைகளையும் அவர் எடுத்த ரன்கள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அவரது ஸ்பெஷலான ஹெலிகாப்டர் ஷாட் பற்றி ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர். ஒரு சாதாரண இடத்தில் இருந்து வந்து இந்திய அணிக்கு பல பெருமைகளை சேர்த்த தோனிக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுகளை தெரிவித்தும், கிரிக்கெட்டில் காலடி எடுத்துவைத்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்