இந்தியாவில் திருவிழாவாகவே கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் திருவிழா வரும் 29ந்தேதி கோலகலமாக தொடங்குகிறது.முதல் ஆட்டத்திலேயே சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
மஞ்சை சட்டைகள் மாப்பிள்ளைகள் பெரும்பாலும் தோனி என்ற பெயரை கேட்டாலே அப்படியொரு உற்சாகம் மைதனாத்திற்குள் தோனி களமிரங்கும் போது நாளபக்கமும் தோனி….தோனி…!என்ற எகோபித்த கோஷங்கள் மைதனாத்தை பிளக்கும் என்று தான் சொல்ல வேண்டும் இந்த ஆரவாரம் எல்லாம் எங்கள் தலைவன் வந்துட்டாண்டா என்று ரசிகர்கள் கர்ஜித்து கூறுவதையே தான் காட்டுகிறது.தோனியின் திறமை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை ஆட்டக்களத்தில் தன் அதிரடியை காட்ட ஒரு போது தவறியதில்லை.
ஆனால் சமீபகாலமாகவே அவர் குறித்த விமர்சனங்கள் பறந்த வண்ணம் இருந்தது.தோனி ஓய்வு பெற போகிறார்.கிரிக்கெட் விளையாடுவாரா?ஐபிஎல்-லில் பங்கேற்பாரா? என்றெல்லாம் கேள்விக் கனைகள் குவிந்தது.மேலும் அவருடைய ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தது.உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் அவர் இடம்பெறாமல் நீண்ட நாள் ஓய்வில் இருந்துவந்தார்.இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடங்க உள்ளது எப்போதும் போல் இம்முறையும் அவரே அந்த அணியை வழிநடத்த தலைமை தாங்குகிறார்.அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் சென்னை அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளது.அந்த விளம்பரத்தில் விமானத்தில் பயணிக்கும் ஒரு ஜோடி தங்களது செல்போனில் மீம்ஸ் பற்றி பேசிக்கொள்கின்றனர்.
நபர் ஒருவர் அப்பெண்ணிடம் தன்னுடைய மீம்ஸை பார்க்குமாறு சொல்கிறார்.அந்த பெண்ணும் போனில் வரும் மீம்ஸ் வீடியோ ஒன்றை பார்க்க வீடியோவில் இளைஞர் ஒருவர் மனசுல தங்கம்..மைதனாத்துல சிங்கம்…சீறி பாய்ந்து வருவார நம்ம தல..! என்று பேசுகிறார்.இதனை பார்த்துக்கொண்டிருக்கும் அந்த ஜோடிகள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கின்றனர்.அந்த நபர் சும்மா உளருகிறான்..ஜான்சே இல்ல என்று கூற எதிர்சிட்டில் தோனி மஞ்சள் டிஷர்ட்டுடன் அமர்ந்துயிருக்கவே இதனை கண்ட அப்பெண் அந்த நபருக்கு சைகை காட்டுகிறார்.
உடனே சுதாரித்த நபர் தல..சார்…அண்ணன் என்று உளரியபடி நீங்க எவ்வளவு நாள காணோமே அதான் மக்கள் என்று எதைஎதையோ கூற வர தோனி புன்னகையுடன் சத்தம் ஒவரா இருக்குலா..என்று அவரிடம் இருந்த ஹேட்போனை எடுத்து தன் காதில் மாட்டிக்கொள்கிறார்.
பின்னர் விமானத்தில் சிட் பெல்ட் அணியுங்கள் இல்லையென்றால் பிளேனும்,ஹெலிகாஃப்டரும் டேக்காஃப் ஆகாது என்று அறிவிப்பு வருகிறது அதனை தொடர்ந்து இப்ப ஆட்டம் பேசும் பாரு.! என்று சென்னை அணியின் குரலில் அடுத்து ஒலிக்கிறது.
தன்னை விமர்சிப்பவர்களுக்கு தோனியின் சூசகப்பதிலை பார்த்த ரசிகர்கள் மற்றும் ஆட்டம் பேசும் பாரு என்ற குரல் மூலமாக பல ஹெலிகாஃப்டர் ஷாட்களை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…